உள்ளூர் செய்திகள்

பற்று போட்டால் பாரம் குறைக்கும் திரிகடு!

பனி காலங்களில் நெஞ்சு சளி அதிகமாக சேரும். சிலருக்கு வறட்டு இருமல் இருக்கும். பேசும் போது தொண்டையில் கரகரப்பு ஏற்படலாம். இது மாதிரியான பாதிப்புகளுக்கு விரைவில் நிவாரணம் தரக் கூடியது இயற்கையான திரிகடு சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மூலிகைகளால் தயாரானது. அரை டீஸ்பூன் திரிகடு சூரணத்தில் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்து, காலை, இரவு உணவுக்கு 30 நிமிடங் களுக்கு முன் சாப்பிட்டு, அரை டம்ளர் வெந்நீர் குடிக்கலாம். தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் சாப்பிட்டாலே சளி, இருமல், வறட்டு இருமல், உடல் வலி, தொண்டை வலி, கரகரப்பு குணமாகி விடும். இதுவே ஆஸ்துமா, சிஓபிடி, பிராங்கைடிஸ், நிமோனியா மாதிரியான பாதிப்புகள் இருந்தால், ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் தொ டர்ச்சியாக 30 நாட்கள் சாப்பிட வேண்டும். குளிர், மழை காலங்களில் ஏற்படும் மூச்சிரைப்பு, சுவாசம் சீராகும். நுரை யீரலையும் படிப்படியாக பலப்படுத்தும். நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றி, நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும் தன்மை திரிகடு சூரணத்தில் உள்ளது. ஆர்த்ரைடிஸ் பாதிப்பு இருந்தால், 30 - - 60 நாட்களுக்கு தொடர்ந்து குடிக்லகாம். தலைவலி, பாரம் இருக்கும் போது, சிறிதளவு திரிகடு சூரணத்தில், பசும் பால் சேர்த்து குழைத்து, நெற்றியில் பற்றுப் போடலாம். 10 நிமிடங்களுக்கு பின் வெந்நீரில் துடைத்து விடலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் தலைவலி, பாரம் குறையும். ஆயுர்வேத, சித்தா மருந்து கடைகளில் திரிகடு சூரணம் கிடைக்கும். வீட்டிலும் தயாரிக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவில் எடுத்து, தனித் தனியாக வெயிலில் காய வைத்து, அரைத்து பொடி யாக்கிக் கொள்ள வேண்டும். சலித்து மூன்றையும் கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்து தேவையான போது உபயோகிக்கலாம். டாக்டர் ஆர். மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை 99622 62988drmythiliayur@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !