உள்ளூர் செய்திகள்

உடைந்த எலும்புகளை இணைக்கும் ரிசார்பபுள் - உலோகத்தகடு!

விபத்து, சண்டை, மாடியில் இருந்து கீழே விழுந்து முகத்தில் அடிபட்டால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வாய் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணரை பார்க்க வேண்டும். அவர்களால் தான் துரிதமாகச் செயல்பட்டு, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். ஏன் முக சீரமைப்பு டாக்டர்? முகத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவை மட்டும் சரி செய்தால் போதாது. முகத்தில் எந்தவித தழும்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். உணவுப் பொருளை கடிப்பது, விழுங்குவது, பேசுவது என்று அனைத்து செயல்பாடுகளையும் இயல் பாக்க வேண்டியது அவசியம். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வு நெருங்கும் சமயம், மாடியில் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து படித்த மாணவி தவறுதலாக கீழே விழுந்து விட்டாள். அவளின் முகம் மொத்தமும் சிதைந்து விட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். மாணவிக்கு மயக்க மருந்தை வாய் வழியாக கொடுத்தால் அறுவை சிகிச்சைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால், தொண்டையில் துளை போட்டு அதன் வழியாக செலுத்தலாம் என்று சில டாக்டர்கள் ஆலோசனை சொன்னார்கள். 17 வயது பெண்ணுக்கு இது சரியாக வராது என்று எனக்கு தோன்றியது. 'சப்மென்டல் இன்கு பேஷன்' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தலாம் என்று நான் சொன்னேன். தாடைக்கு கீழே குழாய் இணைத்து மயக்க மருந்து தரும் முறை இது. மூத்த மயக்கவியல் நிபுணர், நான் சொல்வதை புரிந்து கொண்டார். முகம் மொத்தமும் சிதைந்திருந்தது. அறுவை சிகிச்சை மூலம் தாடையை சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்தோம். நீண்ட நாட்களுக்கு பின் மாணவியால் சாப்பிட முடிந்தது; பேச முடிந்தது; கண்ணாடியைப் பார்த்து சிரிக்க முடிந்தது. இந்த மாணவிக்கு காலிலும் அடிபட்டிருந்தது; நடப்பதற்கு சிரமப்பட்டாள். கா ல் காயத்தில் தொற்று ஏற்பட்டது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், தேர்வு நெருங்கி விட்டதால், தொழிலாளியான மாணவியின் அப்பா தன் கைகளால் சுமந்து சென்று தேர்வு எழுத வைத்தார். இந்த தகவல் படத்துடன் நாளிதழ்களில் வெளியானது. மாணவியின் மன தைரியத்தைப் பாராட்டி தமிழக முதல்வர் 'எக்ஸ்' பக்கத்தில் பாராட்டியிருந்தார். அடுத்த முறை மருத்துவ ஆலோ சனைக்கு வந்த போது, முதல்வர் நேரடியாக வந்தார்; மருத்துவக் குழுவை அழைத்து பாராட்டினார். இது, என் பணியில் மன நிறைவை தந்த சம்பவம். உலோகத் தகடுகள் எலும்பு முறிந்த இடத்தில் ஆரம்பத்தில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத் தகடு பொருத்தினோம். இதை ஆறு மாதம், -ஒரு ஆண்டில் எடுக்க வேண்டும். நான் மாணவனாக இருந்த போது இது தான் நடைமுறை. அதன்பின், டைட்டானியம் உலோகத் தகடு வந்தது. இதை பொருத்தும் போது எலும்புடன் இணைந்து, இதை உடல் ஒரு அங்கமாகவே ஏற்றுக் கொள்ளும். அதனால், இதை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது. எலும்பு வளரும் போது... எலும்பு வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். குழந்தைகள், வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு எலும்புகளின் வளர்ச்சி இருக்கும் என்பதால், நவீன தொழில்நுட்பத்தில் மூன்று மாதங்களில் கரையக்கூடிய 'ரிசார்பபுள் பிளேட்' என்ற தகடு புதிதாக நடைமுறையில் உள்ளது. எலும்பு முறிந்த இடத்தில் இந்த தகடை வைத்து இணைக்கும் போது, அடுத்த மூன்று மாதங்களில் தகடு கரைந்து, உடைந்த எலும்பு இயல்பாக இணைந்துவிடும். அரசு மருத்துவமனையில் தினமும் இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. டாக்டர் எஸ்.பி. சேதுராஜன், வாய், முக சீரமைப்பு சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்,அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை 044 - 26151514, 99403 94979sethu.omfs@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்