ஆயுர்வேதம் - தீர்க்க முடியாத தொல்லையிலிருந்தும் தப்பிக்கலாம்!
ராமசாமி, 47, இரு ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவினியில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றவர். அப்பொழுது அவருக்கு கழுத்து, கை, இடுப்புப் பகுதியில் கடுமையான வலியும், ரத்த அழுத்தமும் இருந்தது.ஆயுர்வேத சிகிச்சை பெற்று, இரு ஆண்டுகளுக்கு பிரச்னை ஏதுமின்றி நலமாக இருந்தார்.ரத்த அழுத்த மாத்திரையும், இரண்டு ஆண்டுகளாக அறவே நிறுத்தி விட்டார். திடீரென்று அவருக்கு புதியதோர் வியாதி துவங்கியது. தினமும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு நாள், வாந்தியும் எடுத்தார். வயிற்றுப் பகுதியில் வலி, ஏப்பம் தொடர்ந்து அடிக்கடி வந்தது. வயிறு உப்பினாற் போல் இருந்தது.இரவு நேரத்தில், மூச்சுத் திணறல் அதிகமாக அவரை தாக்கியது. தனக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதோ என்ற கவலையில் அதையும் பரிசோதனை செய்தார். ரத்த அழுத்தம் சிறிது கூடவே காட்டியது. தன் நிலைமைக்கு காரணம் என்னவென்று விளங்கவில்லை. அருகிலிருந்த வைத்தியரிடம் சென்று, மருந்துகள் வாங்கி சாப்பிட்டார்.ஆனால், எதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. சில வாரங்கள் கடந்தன. மருந்துகள் எதுவுமே அவருடைய பிரச்னைக்கு பயன்படவில்லை. பிறகு சஞ்சீவினி மருத்துவமனை வந்தார். இவருடைய அவஸ்தைக்கு ஆயுர்வேத வைத்திய முறையில், 'ஆமாசயகதவாயு' என்று பெயர்.ஆமாசயம் என்பது வயிற்றுப் பகுதியை குறிக்கும். அந்த வயிற்றுப் பகுதியில் வாயு சிக்கிக்கொண்டு, அனேக இன்னல்களை விளைவிக்கும். ஆமாசயத்தில் இருக்கும் வாயுவின் சீற்றத்தால், வாந்தி, மூச்சுத்திணறல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, ஏப்பம், அதிக நீர் வேட்கை, மார் பகுதியின் இரு பக்கமும் வலி, இதயம், தொப்புள் பகுதிகளில் வலி, இருமல், தொண்டை, வாய் பகுதியில் வறட்சி, மலச்சிக்கல் ஆகிய அறிகுறிகள் தென்படும். ராமசாமிக்கு வாயுவின் தாக்குதலினால் அவருடைய ஆமாசய பகுதியில் ஏற்பட்ட நோயின் விளைவுதான் அவரை வாட்டியது.இவருக்கு ஆயுர்வேத முறை பழக்கம் இருந்ததால், ஸ்கேன், எம்.ஆர்.ஐ., என்று பரிசோதனை களை தேடி அலையாமல், நேரடியாக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். ஒரே வாரம் அவர் உட்கொண்டமருந்தினால், அவர் முற்றிலும் குணமடைந்தார். சில வேளைகளில் வாயு சீற்றமடைந்து, முடவாதமாக, உடலில் ஆங்காங்கு வேதனையை ஏற்படுத்தக் கூடும்.அதுவும் மார்பு, நெஞ்சு பகுதிகளில் வாயுவின் சீற்றத்தால் வரும் வலி, அனேக மக்களிடையே இதய வியாதியோ என்ற அச்சமும், பீதியும் ஏற்படுத்தும். பொதுவாக மழைக் காலத்தில், வாயுவின் சீற்றம் உடலில் அதிகரிக்கும். எனவே, மழைக் காலங்களில் காரமான, ஜீரணத்திற்கு கடினமான உணவுகளையும் காரமான உணவையும், குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஜீரணத்திற்கு உதவும் வெந்நீரை பருக வேண்டும்.வாயுவின் போக்கை சரி செய்யும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.டாக்டர் பி.எல்.டி. கிரிஜாசஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்63, காமராஜ் அவென்யு முதல் தெரு,அடையாறு, சென்னை - 20.sanjeevanifoundation@gmail.comபோன்: 044 2441 4244