உள்ளூர் செய்திகள்

"மூட்டுமாற்று சிகிச்சையில் நோய் தொற்று வருமா

32 வயதான நான் பட்டறையில் பணிபுரிந்த போது, பறந்து வந்த ஆணி, முழங்கால் மூட்டில் நுழைந்தது. இருநாட்களுக்குப் பின் மூட்டு வீங்கியது. தற்போது அதில் கிருமி உள்ளதாக கூறும் டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். இதனால் மூட்டு பிரச்னை சரியாகுமா?ஒரு ஆணி போன்ற பொருள் மூட்டினுள் சென்றதால், மூட்டினில் உள்ளே கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளது. உடனடியாக நீங்கள் மூட்டினில் உள்ள அசுத்த நீரை அகற்றி, அந்த ஆணியையும் எடுக்க வேண்டும். இதனை கூடிய விரைவில் செய்வது நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால் மூட்டினில் உள்ள ஜவ்வு, கிருமிகளால் அழியும் அபாயம் உள்ளது. இதை மூட்டு நுண் துளை சிகிச்சையில் செய்ய முடியும். டாக்டர்களிடம் கலந்து ஆலோசனை பெறவும்.63 வயதான எனக்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்து கீழே விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதில் பந்து பகுதி உடைந்துள்ளது. அதை சேர்த்து வைக்கும் வாய்ப்பு இல்லை என டாக்டர் கூறுகிறார். எனக்கு சிகிச்சை கிடையாதா?தோள்மூட்டின் பந்து பகுதி சேர்க்க முடியாத அளவிற்கு முறிந்து இருந்தால், அதற்கு நவீன மருத்துவ உலகில் தோள்மூட்டு மாற்று சிகிச்சை செய்யலாம். இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் கையை அசைத்து, செயல்பாடுகள் நன்றாக செய்யக் கூடிய அளவிற்கு புதுமையான செயற்கை மூட்டுகள் உள்ளன. முறையாக செய்யப்பட்டால் வலியின்றி சிறந்த செயல்பாட்டுடன் பல ஆண்டுகள் பிரச்னையின்றி இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை.என் வயது 75. மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தால் 0.3 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் என்கின்றனர். எனக்கும் அதுபோல ஆகிவிடுமோ என பயம் உள்ளது. நான் என்ன செய்வது?எந்தச் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மை, தீமைகள் உள்ளன. சிகிச்சை பெறும் முன், சிகிச்சையின் பலன்கள், தீமைகளைவிட பலமடங்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் வருவதில்லை. உங்கள் டாக்டர் உங்களுக்கு கூறியிருப்பது உலகளவில் உள்ள புள்ளியியல். அது ஒரு பொதுவான கருத்து. தீயவை எனக்கே வரும் என நினைப்பது தவறு. சரியான தொழில்நுட்பம், நவீன முறையில் செய்யப்பட்டால் வெற்றி வாய்ப்பு மிகஅதிகம். தன்னம்பிக்கையுடன் தைரியமாக சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442-46436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்