உள்ளூர் செய்திகள்

பூனை மூலம் பரவும் காசநோய்

காசநோய், மைகோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் என்ற கிருமியால் ஏற்படுகிறது.இது ஒரு தொற்று நோய். மனிதனோடு நாய், பூனை, ஆடு, மாடு கோழி போன்ற விலங்குகளுக்கும் பரவும். இந்நோய் ஏற்பட்ட விலங்கின் பால், வெண்ணெய், இறைச்சியை உண்ணுவதாலும், நோயுற்ற விலங்கின் சுவாசம் நேரடியாக மனிதனுக்குச் செல்வதாலும் அதன் நீர்த்திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும், இந்நோய் பரவுகிறது. பூனையிலிருந்து மனிதனுக்கு காசநோய் பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது. பூனையால் ஏற்படும் அறிகுறிகள் சுவாச மண்டல உறுப்புகள் மற்றும் உணவு மண்டல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. பூனையின் உடல் மெலிந்து கொண்டே இருக்கும். அடிக்கடி இருமும்; சளியைக் கக்கும்; காய்ச்சல் ஏற்படும்.இந்நோய் மனிதனை தாக்கியிருந்தால், விடாமல் காய்ச்சல் இருக்கும்; சளியும் உண்டாகும். உடல் மெலியும், உணவு செரிக்காது, பசி இருக்காது. எடை குறையும். நிணநீர் நாளங்களில் வீக்கம் ஏற்படும். எளிதில் நோயைக் கண்டுபிடித்து விரைவில் சிகிச்சை அளித்து சத்துள்ள உணவுகளை அளித்தால் இந்நோயை விரைவில் குணப்படுத்தலாம்.செ.தில்லைநாதன், பொது மருத்துவர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்