உள்ளூர் செய்திகள்

காது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். சீப்பு வைத்து தலை வாருதல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சீப்பு பயன்படுத்துவது நல்லது. ஆண்கள் தலை முடியை அதிகம் வளர்க்க கூடாது. மாதம் ஒரு முறை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். தலைமுடி காதுகளை தொடும் அளவுக்கு முடி வளர்க்க கூடாது.குளிக்கும் போது காதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கூர்மையான பொருட்களால் காதுகளை சுத்தம் செய்யக்கூடாது. காகிதம் தீக்குச்சி இவற்றால் காது குடையக்கூடாது. அதே போல் பேனா, ஹேர்பின், குச்சி, கூர்மையான பென்சில், கோழிஇறகு போன்றவற்றை கொண்டும் காதுகளை சுத்தம் செய்யக்கூடாது.துணியை கயிறு போல் சுருட்டி, காதை சுத்தம் செய்யலாம். மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும், பஞ்சு சுற்றிய காகித குச்சியை (பட்ஸ்) கொண்டு சுத்தம் செய்யலாம். காதில் ஏதேனும் தொல்லை ஏற்பட்டால், நாமே மருந்து போடக்கூடாது. டாக்டரை சந்தித்து அவர் ஆலோசனைப்படி தான் நடந்து கொள்ள வேண்டும். காதுக்கு எண்ணெய் காய்ச்சி விடுவது, செவிப்பறையை பழுதடைய செய்யும்.காதில் வாயால் ஊதக்கூடாது. காதின் உள்ளே செவிப்பறை உள்ளது. செவிப்பறைக்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வால்பாறை, நீலகிரி போன்ற குளிர் பிரதேசங்களில் மலையின் மீது ஏறும் போதும், இறங்கும் போதும் காது அடைத்துக்கொள்ளும். இதைக் கண்டு பயப்படத்தேவையில்லை. காற்றழுத்த மாற்றம் காதை பாதிக்காமல் இருக்க, காதை சுற்றி துண்டு கொண்டு தலைப்பாகை போல கட்டிக்கொள்வது நல்லது.ஒரு போதும் காதை பிடித்து திருகவோ, காதில் அறையவோ கூடாது. செவிப்பறை ஒரு மிக மெல்லிய ஜவ்வினால் ஆனது. எனவே காதில் அடிக்க கூடாது. அதே போல் காதை பிடித்து தூக்கவும் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !