உள்ளூர் செய்திகள்

"ஸ்குரூ வைத்து சிகிச்சை செய்த பின்னும் வலி

மூட்டுவாதத்தால் பதிக்கப்பட்ட எனக்கு, மூட்டுகளில் வலி உள்ளது. ருமாட்டாய்டு நோய் இருப்பதாக டாக்டர் கூறுகிறார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படியும் கூறினார். இதனால் எல்லா வலியும் சரியாகிவிடுமா?மூட்டுவாத நோய் என்னும் ருமாட்டாய்டு நோய் ஆரம்ப காலத்தில் மூட்டுவீக்கத்தை கொடுக்கும். நோய் தீவிரமடையும்போது, மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வை பழுதடையச் செய்யும். ஆரம்பகாலத்தில் இந்நோயை DMARD மருந்துகளால் கட்டுப்படுத்தலாம். தேய்மானம் தீவிரம் அடைந்தால், மருந்துகள் வலி நிவாரணம் அளிக்காது. ஆதலால் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அவ்வாறு மூட்டுமாற்று சிகிச்சை செய்யும்போது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூட்டினில் மட்டும் வலிநீங்கும். மற்ற மூட்டுகளும் அதன் தீவிரத்தை பொருத்து, மருந்து அல்லது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.எனது வயது 58. எனது இடுப்பு மூட்டு முறிந்து, அறுவை சிகிச்சையில் 'ஸ்குரூ' வைத்து சரிசெய்யப்பட்டது. இன்னும் வலி உள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா?இடுப்பு மூட்டினில் தொடை எலும்பின் கழுத்து பகுதியில் முறிவு ஏற்பட்டால் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு முறிவு இணையாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இப்படி ஏற்பட்டால் உங்கள் இடுப்பு மூட்டினில் உள்ள 'ஸ்குரூ'வையும், ரத்த ஓட்டம் இல்லாமல் சீரழிந்த மூட்டு பகுதியையும் அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப்பட்டால் வலி பூரண நிவாரணம் கிடைக்கும். டாக்டரை கலந்து ஆலோசிக்கவும்.எனது மணிக்கட்டு மேற்பகுதியில் சிறுகட்டி உள்ளது. சமீபகாலத்தில் கட்டி சற்று பெரியதாக தெரிகிறது. லேசான வலியும் உள்ளது. இது 'காங்லியன்' கட்டி எனக் கூறிய டாக்டர், அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்துள்ளார். நான் என்ன செய்வது?'காங்லியன்' என்பது தசைநார் அல்லது மூட்டின் உறையில் இருந்து ஏற்பட்ட கட்டி ஆகும். பொதுவாக இதனால் எவ்வித கெடுதியும் ஏற்படாது. அதிகமான வலி ஏற்பட்டால் அதற்கு வேறு காரணங்களும் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி வேறு காரணம் இல்லாமல் வலி இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்பும் 30 சதவீதம் பேருக்கு, அது திரும்ப வரும் வாய்ப்பும் உள்ளது. அதனால் முடிந்தவரை இதற்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்ப்பது நல்லது.நான் விளையாடும்போது வலது கணுக்காலின் பின்பகுதியில் தீவிர வலி ஏற்பட்டது. அன்று முதல் கணுக்காலின் செயல்பாடு சரியில்லை. டாக்டர் பரிசோதித்ததில், தசைநாரில் கிழியல் ஏற்பட்டுள்ளது என்றார். என்ன செய்வது?நடுத்தர வயதுள்ளவர்கள் பல ஆண்டுகள் கழித்து, திடீரென விளையாட்டில் பங்கேற்கும்போது, தசை நார்கள் போதுமான வலுவில்லாததால், ஏற்படும் விளைவு இது. இவ்வாறு ஆகாமல் இருக்க, விளையாடுவதற்கு முன், 'வார்ம் அப்' செய்வதால் தசை நார்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. உங்களுக்கு இப்போது தசை நார் கிழியல் ஏற்பட்டு இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து சீரமைக்க வேண்டியது இருக்கும். சீரமைத்தபின் 3 மாதங்களில் விளையாட்டில் பங்கேற்கலாம்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை. 93442-46436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்