உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

'த்ரெட்மில்லில்' நடைப்பயிற்சி செய்வது நல்லதா?கே.கார்த்திக், புதுச்சேரி.'த்ரெட்மில்' மீது, அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக நடந்தாலோ, ஓடினாலோ, அது நல்லதல்ல. இதனால், மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். 'த்ரெட்மில்லில்' நேரத்தை தேர்வு செய்து, தங்களுக்கு சவுகரியமாக இருக்கும் வேகத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் ஓட்ட பயிற்சி செய்வதற்கும், 'த்ரெட்மில்லில்' செய்வதற்கும் முக்கிய வேறுபாடே, நம் உடல் அசைவு தான். 'த்ரெட்மில்லில்' உங்கள் கைகளை அசைப்பதற்கும், கால்களை நீட்டி நடப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இதனால், உடலின் கீழ்பகுதியில் அதிக சிரமம் ஏற்பட்டு, மூட்டு வலிக்கு வழிவகுக்கும். பொதுவாக, 'த்ரெட்மில்லை' புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு, இந்த பிரச்னை ஏற்படலாம். பிசியோதெரபிஸ்ட் அல்லது உடற்பயிற்சி வல்லுனரிடம், உங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஆலோசனையை பெறலாம். சுரேஷ்குமார், எலும்பு நிபுணர், சென்னை.பனிக்காலம் வந்தாலே, என் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு உண்டா?ச.வேணி, திருநின்றவூர்நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி, 10 நிமிடம் ஊறிய பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினசரி செய்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும். தினசரி இரவு தூங்கப் போகும் முன், வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை, 15 நிமிடம் வைத்து, பின் பிரஷ் கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். பின், ஒரு டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் ஒரு எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினசரி செய்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம். கிளசரினில், ரோஸ் வாட்டரை கலந்து பாதங்களில் தடவி வந்தாலும், வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறையும்.த.திலகா, அழகுகலை நிபுணர், சென்னை.எனக்கு வயது, 32; புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதால், வாய் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு என்ன செய்வது?வெ.தினேஷ், பெரும்பாக்கம்.வாய் துர்நாற்றத்தைப் போக்க சிறந்த எளிய வழி, வாய் சுகாதாரம் தான். முதலில், புகைப்பதை நிறுத்துங்கள். புகைப்பழக்கம், வாய் துர்நாற்றத்தை மட்டுமல்ல, நுரையீரலுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது. அடுத்து, ஒரு நாளைக்கு இருமுறை பற்களைத் துலக்க வேண்டும். பற்களை மட்டுமல்லாமல், நாக்கையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை பற்களைத் துலக்கும் போதும், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா, நாக்கில் தான் வளர்கிறது. உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், வாய் துர்நாற்றம் வீசக்கூடும். எனவே, நிறைய தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால், வாய் உலர்ந்து போகாமல் இருக்கும். கே.சக்ரவர்த்தி, பொது மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்