உள்ளூர் செய்திகள்

வயிற்று புண்ணை ஆற்றும் ரோஜா

சீதபேதி என்கிற நோயை ரோஜா குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆவதாக கூறும் பெண்களுக்கு, ரோஜாப் பூ அருமையான மருந்து. சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு, வைட்டமின் மாத்திரைகள், டானிக்குகளை, வாங்கிக்கொள்கிறோம். ரோஜாப்பூ ஒரு இயற்கை அளித்த, உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடிய, ஒரு அற்புத மூலிகை பூ, இந்த ரோஜாப்பூ. நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது, மிகவும் நல்லது. இதை வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து, தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில், வைட்டமின் சி அதிகம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்