உள்ளூர் செய்திகள்

முதுகு வலியால் அவதியா? இருக்கையை மாற்றுங்கள்

உடல் இயக்கத்தில், எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் முக்கிய பங்குள்ளது. இதில் பிரச்னை வருவதுதான், நோய்களாகின்றன. ஜவ்வு மற்றும் நரம்பு சம்மந்தபட்ட பிரச்னைகளால், முதுகு வலி வரலாம். இதற்கு, அதிக எடை தூக்குதல், முதுகை கூன் போட்டு நீண்டநேரம் வேலை பார்த்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை காரணமாக கூறலாம். வேலை பார்க்குமிடத்தில் பணியிடத்தில் அமரும் நாற்காலியை கவனிப்பது நல்லது. பின்புற சாய்வு தோள் வரை, நேராக இருத்தல், குனிந்து கூன் போடாமால், நிமிர்ந்து அமர்ந்து வேலை பார்த்தல் அவசியம். லேசாக தொப்பை விழ ஆரம்பிக்கும் போதே, டயட்டில் கவனம் செலுத்தி, உடல் எடையை குறைப்பது நல்லது. நாற்காலியில் அமர்ந்து, கால் தொங்கிக் கொண்டிருக்காமல், கீழே வைக்கவும். உயரம் குறைந்தவர்கள், கால் வைக்க புட் ஸ்டூல் வைத்து, அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க நேர்ந்தால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, எழுந்து கொஞ்சம் நடக்கலாம். இத்துடன் எலும்புக்கு வலிமை சேர்க்கும் உணவுகளை டயட்டில் சேர்க்கவும். பெண்களுக்கான முதுகுவலி: பொதுவாக பேக் பெயின், பெண்களுக்கு அதிகம் வருகிறது. மாதவிலக்கு சமயங்களில், எலும்புகளில் வலி அதிகரிக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக, அந்த சமயங்களில் உளுந்துக்கஞ்சி, உளுந்துக்களியை உணவில் சேர்ப்பது நல்லது. குழந்தைப் பேற்றின் போது, இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து, பின்னர் எலும்புகள் பழைய நிலைமைக்கு வரும். அந்த சமயத்திலும், எலும்புகளுக்கு வலிமை சேர்க்க, உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல், எலும்பு தேய்மானம் துவங்கும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக, எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல், உணவில் கேழ்வரகு, பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை, சோயாபீன்ஸ் ஆகியவை கட்டாயம் சேர்க்க வேண்டும். புரூட்டி மில்க் ஷேக்: ஒரு கப் பாலுடன், ஒரு பச்சை வாழைப் பழத்தை சேர்த்து அடித்துக் கொள்ளவும். மாதுளையை உரித்துப் போட்டு, வெல்லம் சேர்த்து லேசாக அடிக்கவும். மாதுளை லேசாக மட்டுமே உடைந்திருக்க வேண்டும். இந்த மில்க் ஷேக், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பீட்ஸ் உருண்டை: கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து, மாவை பதமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவில் பாதாம், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும். அத்துடன் சுவைக்கு வெல்லத்தை பொடித்து சேர்க்கவும். கொஞ்சம் பால் சேர்த்து ஒன்றாகப் பிøசந்து, பீட்ஸ் உருண்டை தயாரிக்கலாம். பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்øசயில் அடங்கியுள்ள, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அடங்கியிருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்