உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / பரத நாட்டியத்தை உயிர்ப்பித்த ருக்மணி தேவி

பரத நாட்டியத்தை உயிர்ப்பித்த ருக்மணி தேவி

ருக்மணி தேவிமதுரையைச் சேர்ந்த தேசபக்தரும், சங்கீத வித்தகருமான நீலகண்ட் சாஸ்திரியின் மகளாக பிறந்தவர்.பிறந்தது 1904 ஆம் ஆண்டு, மறைந்தது 1986 ஆம் ஆண்டு.தான் வாழ்ந்த 82 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார், குறிப்பாக சாதாரண நடனம் என்று கருதப்பட்ட பரதநாட்டியத்தை சீரமைத்து புடம்போட்டு புத்துயிர் கொடுத்து அதை உலகமெங்கும் எடுத்துச் சென்று இன்று உயர்ந்த கலையாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்டவர்.நாட்டியமே வாழ்க்கை என்று வளர்ந்தவர் தியாசாபிகல் சொசைட்டியில் சேர்ந்து பல்வேறு மேலைநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார், தர்மம்,ஆன்மீகம்,பக்தி அடிப்டையிலான கதைகளை தேர்வு செய்து அதில் நாட்டிய நாடகத்தை அமைத்து நடனத்தை புதிய பாதை போட்டுத்தந்தார்.பத்ம பூஷன் உள்ளீட்ட பல உயரிய விருதுகளை பெற்றாலும் பரதத்திற்கு உயிர்ப்பை கொடுத்து உயர்த்தியே தனது வாழ்க்கையின் பெரும் சாதனையாக கருதினார்.அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவர் வடிவமைத்த நாட்டிய நாடகங்களைக் கொண்டு சென்னை கலாசேத்ரா கலைக்கல்லுாரி மாணவ மாணவியர் பங்கேற்கும் மூன்று நாள் நாட்டிய நாடக விழா நடந்து வருகிறது, முதல் நாளான நேற்று கண்ணப்பர் குறவஞ்சி நாடகம் இடம் பெற்றது.இன்று மாலை 6 மணிக்கு பாதுகா பட்டாபிேஷகமும்,நாளை மாலை 6 மணிக்கு சபரி மோட்சமும் நடைபெறும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sreenivas Jeyaraman
மார் 04, 2025 20:39

பரதம் பாரதத்தின் உயிரோட்டம்...இத்தகைய சரித்திர நிகழ்வுகளை தினமலர் வாசகரிடத்து பகிர்ந்தமைக்கு நன்றி... ஆடலரசராய் கால் மாறி ஆடிய இறைவன் விளையாடிய மதுரை... இதை நினைவூட்டியமைக்கு நன்றிகள் பல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை