உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / நரகமாகிப் போன அமெரிக்க நகர வாழ்க்கை

நரகமாகிப் போன அமெரிக்க நகர வாழ்க்கை

வளமும் வசதியும் நிறைந்த அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலும், சிலர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 28 வயதான ஸ்டெபானி வீடில்லாமல், கென்னடி சென்டர் அருகே ஒரு போம் மேட்ரஸில் ஓய்வெடுத்தபடி இருந்தார். அவரது உலகம் அங்கு இருக்கும் சிலரைப் போலவே சோகத்திலும் தனிமையிலும் மூழ்கியிருந்தது.ஸ்டெபானியின் நிலை, ஒரு மறைக்கப்பட்ட போராட்டத்தின் சின்னம். வேலைவாய்ப்பு இழப்பு, உயர்ந்துவரும் வீட்டு வாடகை, மனநலப் பிரச்சினைகள், குடும்ப ஆதரவு இல்லாமை - இவை அனைத்தும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன. நகரின் பிரகாசமான வெளிப்புறங்களும், கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளம் நிறைந்த இடங்களும், இவர்களைப் போன்றவர்களின் வாழ்வியலை மறைத்து விடுகிறது.வீடற்றோர் பிரச்சினை அமெரிக்காவில் தீவிரமாகி வருகிறது,நாட்டின் கவுரவம் கெடும் என்று வாஷிங்டன், டி.சி.யில் சாலைகளில் தங்குவதை அரசு ஆதரிப்பதில்லை அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர், சாலைகளில் தங்கியிருப்பதற்காகவே போராடுகிறார்கள். அரசு மற்றும் சமூக அமைப்புகள் உணவு, தற்காலிக முகாம்கள், மருத்துவ உதவிகளை வழங்கினாலும், அது போதவில்லை . சிலர் கடுமையான காலநிலை, பாதுகாப்பின்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய வாழ்வால் இப்படி இன்னும் பாதிக்கப்படுகிறார்கள்.ஸ்டெபானியின் கதை, நகரில் வாழும் பலரது மறைக்கப்பட்ட வாழ்க்கையின் உண்மை முகமாக இருக்கிறது. இது சமூகத்தின் கவனத்தை படிப்படியாக ஈர்த்து வருகிறது உலகின் கவனத்தையும் பெற்றுவருகிறது. மனிதநேயம், சமூக நீதி மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு குறித்து , அரசு மற்றும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.இந்த புகைப்படம், நகரத்தின் பரபரப்பும் வளமும் பின்னணியில் இருக்கும் போது, ஒரு மனிதன் அல்லது ஒரு பெண் சந்திக்கும் தனிமையும் போராட்டமும் எவ்வளவு கசப்பானதாக இருக்கலாம் என்பதற்கான உதாரணமாகும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
செப் 12, 2025 21:28

மிக போலியான வாழ்க்கை. வெளியில் சென்றால் திரும்ப வருவோமா என்ற பாதுகாப்பு இல்லாத நிலை, முறையற்ற உறவுகள் இது தான் 70% உண்மையாக உள்ள நிலை.


R K Raman
செப் 11, 2025 18:51

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் குடும்ப அமைப்பு என்று பெரிதாக ஏதும் இல்லை..‌.அதனால் தான் சிரமப்படும் நபர்கள் ஆதரவின்றி தவிர்க்கிறார்கள்.‌ நம் நாட்டிலும் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் போல உள்ளது... மேற்கத்திய நாட்டின் கலாச்சாரப் பரவல் மிகவும் ஆபத்து...


KRISHNAN R
செப் 12, 2025 11:42

யாரும் பெற்றோர் சொல் கேட்பதில்ல.. வெஸ்டர்ன் லைஃப் தேவையாம்.... மற்ற வீட்டில் என்ன அதே போல இருக்கிறது..


பெரிய குத்தூசி
செப் 11, 2025 15:07

உலகம் முழுவதும் அமெரிக்கா மறைமுகமாக நடத்தி வரும் தீவிரவாத பாவ கணக்குகள் தீர்க்க நிறைய உள்ளது. அமெரிக்காவின் நரித்தனத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகம். உலகின் மோசமான தீவிரவாதி அமெரிக்கா என கூறலாம். உலகில் நடக்கும் தீவிரவாதம், கலவரங்களின் பின்னே அமெரிக்கா சுயநலன் மட்டுமே இருக்கும். கர்மா வலியது. இந்த பாவ கணக்குகளால் இனிமேல்தான் அமெரிக்கா வின் இறங்கு முகம் ஆரம்பிக்க உள்ளது. அமரிக்காவின் அழிவு இந்தியா மூலமே, பொருளாதார ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியா எப்படி அமெரிக்காவை பிச்சைக்கார நாடக மாற்றப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள். ஜைஹிந்த்


Natarajan Ramanathan
செப் 10, 2025 23:18

அமெரிக்காவின், குறிப்பாக சீதோஷ்ண நிலை நன்றாக உள்ள தெற்கு பகுதி நகரங்கள் அனைத்திலும் இந்த வீடில்லாத மக்களின் பிரச்சனை வெகுவாக உள்ளது. பனிபொழியும் வடக்கு பகுதி நகரங்களில் இது கொஞ்சம் குறைவு. லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற பெரு நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடற்ற மனிதர்கள் உண்டு.


சமீபத்திய செய்தி