உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / நாய் வழிபாட்டு திருவிழா

நாய் வழிபாட்டு திருவிழா

நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருவிழாவுடன் இணைந்து ஒரு தனித்துவமான நிகழ்ச்சி நடைபெறுகிறது — அதுவே “குக்கூர் திஹார்” எனப்படும் நாய் வழிபாட்டு நாள்.இந்த சிறப்பு நாளில், நேபாளத்தின் ஆயுத காவல் துறை வீரர்கள் தங்களது பணிநாய்களுக்கு பூமாலை அணிவித்து, குங்குமம் மற்றும் சந்தனத் திலகம் இட்டு, பூத்தூவி மரியாதை செலுத்தினர். அவர்கள் நாய்களுக்கு சுவையான உணவுகளை அளித்து, தங்கள் துணிச்சலான நம்பிக்கைத்துணைகளை ஆசீர்வதித்தனர்.அன்றைய தினம் அதன் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்று பலரால் பாராட்டப்பட்டது.நாய்கள் நேபாள கலாச்சாரத்தில் “யமதூதரின் தூதர்” எனக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மனிதர்களின் உண்மையான தோழர்களாகவும், காவலர்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். இதனால் திஹார் திருவிழாவின் இரண்டாம் நாளான குக்கூர் திஹார் அன்று, மனிதர்கள் நாய்களுக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தி அவர்களை மரியாதையுடன் போற்றி வழிபடுகின்றனர்.அந்த நாள் முழுவதும் காட்மாண்டுவின் வீதிகள் வண்ணமயமான பூமாலைகள் அணிந்த நாய்களால் அலங்கரிக்கப்பட்டு வலம்வருகின்றன. அரசு துறைகளில் துறை அலுவலர்களாலும்,தனியார்களால் அவர்கள் வீடுகளிலும் நாய்களுக்கு சிறப்பு சடங்குகள் நடத்தப்படுகின்றன.இந்த விழா, மனிதரும் விலங்குகளும் இடையே உள்ள நெருக்கமான பாசத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு அழகான பாரம்பரியமாக நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.சமீபநாட்களாக தெரு நாய்கள் மீது கோபம் அதிகரித்துவரும் வரும் நிலையில் இந்த தகவல் சற்றே ஆறுதலைத் தருகிறது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ