உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / புதுக்கோட்டை மாமனிதர் 515 கணேசன்

புதுக்கோட்டை மாமனிதர் 515 கணேசன்

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி மண் பெற்றெடுத்த மாமனிதர், '515' கணேசன். தன்னுடைய வாழ்நாளையே பிறர் துயர் துடைக்கும் புனிதமான சேவையாக்கி, மக்கள் மனங்களில் வாழும் இவருக்கு 80 வயதைக் குறிக்கும் 'சதாபிஷேக விழா' புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது.ஒரு மனிதனின் வாழ்வு எப்போது அர்த்தமுள்ளதாகிறது என்பதற்கு சாட்சியாக நிற்கும் இந்த எளிமையான மனிதரின் நெஞ்சை நெகிழ வைக்கும் வாழ்க்கைச் சுவடுகள் இதோ:சுமார் 57 ஆண்டுகளுக்கு முன் கணேசன் அவர்கள் வாங்கிய பழைய 'அம்பாஸிடர்' காரின் பதிவு எண் '515'. ஒரு ஏழையின் உயிரைக் காக்க அன்று தனது காரை ஆம்புலன்சாக மாற்றிய இவரது பயணம் 57 ஆண்டுகளாக தொடர்கிறது.இவரது கார்தான் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் இன்று வரை சோறு போடுகிறது எப்போதும் ஏதாவது ஒரு சவாரிக்கு போயக்கொண்டு இருப்பார். ஆனால் யாருக்காவது தனது காரால் உதவி தேவைப்படும் என்றால் சவாரியை விட்டுவிட்டு உதவிக்கரம் நீட்ட காரோடு சென்றுவிடுவார்.நள்ளிரவோ, கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ... கணேசன் ஐயா கொஞ்சம் வரமுடியுமா என்ற குரல் கேட்டால் போதும்; எவ்விதக் கட்டணமும் எதிர்பாராமல் தன்னுடை காரை எடுத்துக்கொண்டு விரைந்து விடுவார்.5,600-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர நேரத்தில் இலவசமாகத் தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மறுவாழ்வு அளித்துள்ளார்.13,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் இறந்தோரின் உடல்களைச் சுமந்து சென்று, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியுள்ளார்.4,000-க்கும் மேற்பட்ட விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.பிறருக்காகவே வாழும் இந்தச் சமூக சேவகருக்கு, 2018-ஆம் ஆண்டு வீசிய 'கஜா புயல்' பெருஞ்சோதனையாக அமைந்தது. அவர் வாழ்ந்த வீடு இடிந்து தரைமட்டமானது.காரும் சேதமடைந்தது.தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கூட அவர் கவலைப்படவில்லை இனி தன்னால் இந்த மக்களுக்கு உதவ முடியாதே என்றுதான் கவலைப்பட்டார் இவரது கவலைக்கு விடை கிடைத்தது அவர் விதைத்த நன்மைகள் வீண்போகவில்லை. அவருடைய அளப்பரிய சேவையை அறிந்த பலரும் முன்வந்து, அவருக்குச் சொந்த வீடும், புதிய காரும் வாங்கிக் கொடுத்துத் தங்கள் நன்றியைக் கடனாகச் செலுத்தினர்.515 கணேசனுக்கு தற்போது 80 வயதாகிறது அவரது பிறந்தநாளை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்நதனர்.தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் பிறருக்காகவே அர்ப்பணித்த 515 கணேசன் அவர்களின் சேவைப் பயணம், வரவிருக்கும் தலைமுறைகளுக்கும் மனிதநேயத்தின் பேரடையாளமாக என்றும் நிலைத்து நிற்கும்!படம்,தகவல்:மீனாட்சிசுந்தரம்,புதுக்கோட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ