உள்ளூர் செய்திகள்

வானில் ஒரு தீபாவளி 2022-ல் காணலாம்

பல ஆண்டுகளாகவே விண்மீன் வெடிப்பு பற்றிய ஆய்வுகள் உலகின் பல இடங்களில் நடந்து வருகின்றன. அப்படி ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், 2022ம் ஆண்டு பால்வீதியில் மிகப்பெரிய விண்மீன் வெடிப்பு நிகழ இருப்பதாக கூறி உள்ளனர். இச்சமயத்தில் தோன்றும் வெளிச்சத்தினை இங்கே பூமியில் இருந்தே காணமுடியும் என்றும் கூறி உள்ளனர். தவிர இவ்வெளிச்சம் குறைந்தது ஓர் ஆண்டு நீடிக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இவ்விஞ்ஞானிகளின் கூற்று உண்மையானால், உலகின் மிகப்பெரிய வானவேடிக்கையை, வானத்தில் நம்மால் காணமுடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !