மிகப் பெரிய தொல்லியல் ஆய்வு
மதுரையில் இருந்து, கிழக்கே, 15 கி.மீ., தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2015 முதல் தொல்லியல் துறை, குழிகள் தோண்டி ஆய்வு நடத்தியது. இதில் உறைகிணறுகள், சுட்ட செங்கல் சுவர், சுடுமண் கூரை ஓடுகள், வெப்ப உலைகள் உள்ளிட்ட 3,000க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரும், கீழடி தொல்லியல் ஆய்வாளருமான, கி. அமர்நாத் ராமகிருஷ்ணன், இது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அகழாய்வு என்று குறிப்பிட்டுள்ளார். இவை கி.மு., மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இருந்தும் ரேடியோ கார்பன் சோதனைக்குப் பிறகு, சரியான கால விவரம் தெரிய வரும்.