உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச, கட்டாயக் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. மத்திய அரசின் 'அனைவருக்கும் கல்வி' இயக்கத்தின் எஸ்.எஸ்.ஏ. என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மாவட்ட வாரியாக பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !