உள்ளூர் செய்திகள்

கணக்கும் இனிக்கும்

என்னிடம் மூன்று எண்கள் உள்ளன. அவற்றின் கூட்டுத்தொகை 42.ஆனால், அந்த மூன்று எண்கள், இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.i) இரண்டாவது எண் முதல் எண்ணைவிட இரு மடங்கு அதிகம்.ii) மூன்றாவது எண் முதல் எண்ணைவிட மும்மடங்கு அதிகம்.எனில், அந்த மூன்று எண்கள் எவை?கணக்கும் இனிக்கும்: 7, 14, 21.முதல் எண்ணை x என்க.நிபந்தனைகளின் அடிப்படையில், இரண்டாவது எண், முதல் எண்ணைவிட இரு மடங்கு அதிகம் என்பதால், அதை 2x என்று கருதலாம்.அதேபோல், மூன்றாவது எண், முதல் எண்ணைவிட மும்மடங்கு அதிகமென்பதால், அதை 3x எனலாம்.மேலும், மூன்று எண்களின் கூட்டுத்தொகை 42 என கொடுக்கப்பட்டுள்ளது.ஆக,x+2x+3x = 42 6x = 42 x = 7எனவே, முதல் எண் = 7.இரண்டாவது எண் = 2x = 2(7) = 14.மூன்றாவது எண் = 3x = 3(7) = 21.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !