உள்ளூர் செய்திகள்

காற்று மாசு அதிகரிப்பு

உலக அளவில் நகரங்களில் வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர். நகரங்களில் காற்றில் உள்ள மாசுகள் அதிகரிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்த்மா மற்றும் இதர நோய்களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக ஆண்டொன்றுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் ஆயுட்காலம் குறைந்து உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஏழை நாடுகளின் நகரங்களில் வாழும் மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். டில்லி, கெய்ரோ, டாக்கா ஆகிய மூன்று நகரங்கள் காற்று மிக மோசமாக மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலின் முன்னணியில் உள்ளன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, டீசல் ஜெனரேட்டர்கள் ஆகியவை காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணங்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !