இந்தியா வருகிறார் ஆங் சான் சூகி
மியான்மர் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi), திங்கட்கிழமை அக்டோபர் 17ம் தேதி இந்தியா வர உள்ளார். 19ம் தேதி வரை, இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சூகி சந்தித்துப் பேசுவார். இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய தொழிலதிபர்களிடையே கலந்துரையாடவும் உள்ளார். இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வாய்ப்பாக அமையும்.