உள்ளூர் செய்திகள்

உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?

பேன் (Lice) ஒரு புற ஒட்டுண்ணியாகும்.உண்மை. பேன்கள் ஓம்புயிரியின் (Host) மேற்பரப்புகளில் வாழும் ஒரு புற ஒட்டுண்ணி (Ectoparasite). இவை பெரும்பாலும் தலையின் பின்பகுதி, காதோரங்களில் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடுகின்றன. மனிதர்களிடம், மூன்று வகையான பேன்கள் காணப்படுகின்றன. அவை தலைப்பேன், உடல் பேன் (சீலைப்பேன்), அந்தரங்கப் பகுதிகளில் உள்ள பேன். இதில் தலைப்பேனே மிகவும் பொதுவானது. இவை அடர் பழுப்பு, வெளிர் பழுப்பு, பழுப்பு, சாம்பல், சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. முதிர்ந்த தலைப்பேன்கள் ஒரு எள் விதையின் அளவில் (3 மி.மீ. நீளம்) இருக்கும். ஈர்கள் மிகவும் சிறியவை. அளவில் 0.5 மில்லிமீட்டருக்கும் குறைவானவை. இவற்றின் வாயில் ஓர் உறிஞ்சுக் குழல் போன்ற அமைப்புள்ளது. இவற்றின் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கின்றன. இவை ஒரு நாளைக்குப் பல முறை மனித ரத்தத்தை உண்கின்றன. இவற்றின் கால்களில் உள்ள நகங்களால், தலைமுடிகளையும் தோலையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !