குழந்தைகள் தூக்கம் பௌர்ணமியால் பாதிப்பு
இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 12 நாடுகளில் குழந்தைகளின் தூக்கம் பற்றி கனடாவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஆய்வு செய்தது. 9 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 5,800 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் உடலில் 'அக்சலரோமீட்டர்' சாதனம் பொருத்தப்பட்டு, தூக்கத்தின்போது உடல் அசைவுகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பௌர்ணமி நாட்களில் குழந்தைகளின் தூக்கம் ஐந்து நிமிடங்கள் குறைவாக உள்ளது தெரிய வந்தது.