உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஏப்ரல் 4, 1855 - மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்த நாள்'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடக நூலை எழுதிய தமிழ் அறிஞர். அந்த நூலில் இருந்து, 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, தமிழக அரசு 1970ல் ஏற்றது. கல்வெட்டு, நூற்பகுப்பு, இலக்கிய ஆய்வுகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.ஏப்ரல் 5, 1908 - பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் என, பல பதவிகளை வகித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்ட முன்வடிவுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.ஏப்ரல் 5, 1964 - தேசிய கடல்சார் நாள்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி, மும்பையில் இருந்து, வாணிபம் தொடர்பாக லண்டனுக்குப் பயணம் செய்தது. அதனை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஏப்ரல் 6, 1815 - மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த நாள்'மகாவித்வான்', 'பிற்காலக் கம்பர்' என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞர். 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர். இவரிடம் தமிழ் பயின்ற மாணவர்களில், 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயரும் ஒருவர். ஏப்ரல் 7, 1950 - உலக சுகாதார நாள்உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பு நிறுவனம். அனைவருக்கும் சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது, இதன் முக்கிய குறிக்கோள். நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாக வைத்து, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: மனச்சோர்வுஏப்ரல் 8, 1938 - கோஃபி அன்னான் பிறந்த நாள்ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். 2001ல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !