உள்ளூர் செய்திகள்

எம்மொழி செம்மொழி: தப்பும் சரியும்

ஒரு சொற்றொடரை வாசியுங்கள். 'செருப்பைப் பார்க்கையில் நீங்கள் அணிந்திருப்பவனின் காலைப் பார்க்கிறீர்கள்; நான் செய்தவனின் கையைப் பார்க்கிறேன்.'இப்படி ஒரு மொழிபெயர்ப்புப் பொன்மொழி. இதை வாசித்ததும் உங்களுக்கு வாக்கிய அமைப்பு தொடர்பாக என்ன தோன்றியது? இது சரியான வாக்கியமா? இல்லை. சிறு குறைகள் உள்ள வாக்கியம் இது. 'செருப்பைப் பார்க்கையில் நீங்கள் அணிந்திருப்பவனின்' என்கிற இடத்தில் ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது. 'செருப்பைப் பார்க்கையில், அதில் அணிந்திருப்பவனின் காலை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இருக்கலாம். 'நீங்கள்' என்னும் சொல் இடம் மாறியிருப்பதைக் கவனியுங்கள். 'நீங்கள் அணிந்திருப்பவனின் காலைப் பார்க்கிறீர்கள்' என்பதை விட, அணிந்திருப்பவனின் காலை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்பதே தெளிவானது. மற்றொன்று: 'செய்தவனின்' என்கிற சொல். இது செருப்பை உருவாக்கியவன் என்ற பொருளில் வருகிறது. செருப்பைச் 'செய்வது' சரியாக இருக்குமா? சட்டைச் செய்வது என்று எப்போதாவது சொல்லியிருக்கிறோமா? சட்டை தைப்பது என்றுதான் சொல்வோம். அதுபோல, 'செருப்புத் தைத்தவனின்' என்று சொல்வதே சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !