உள்ளூர் செய்திகள்

பசுமைப் போராளி

'வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார்6.4.1938 - 30.12.2013திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை அறிவியல் படிப்பை முடித்துவிட்டு, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போதுதான், நவீன வேளாண்மை எந்த நன்மையும் நமக்குச் செய்யாது என்று உணர்ந்து, அரசுப் பணியை உதறினார். அதன்பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.ஆரம்பத்தில், இயற்கை விவசாயம் பற்றி எடுத்துச் சொன்ன நம்மாழ்வாரை, மக்கள் 'முட்டாள்' என்றே அழைத்தனர். இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, பிரசாரம் செய்த அனைத்து இடங்களிலும், அவமானங்களைச் சந்தித்தார். ஆனாலும், தன் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக, யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலர் சொன்னார்கள். அது தவறானது என்றும், பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே நைட்ரஜன் சத்து அதிகரிக்கும் என்றும், நிரூபித்துக் காட்டினார் நம்மாழ்வார்.பயோ தொழில் நுட்பங்கள் அனைத்தையும், விரல்நுனியில் வைத்திருந்தார். கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்து, பாரம்பரிய ஒட்டு ரகங்களை ஆதரித்தார். தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைப்பதற்குக் காரணம் நம்மாழ்வாரே!சுற்றுச்சூழல் சார்ந்தும், சிறப்பாகச் செயல்பட்டார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது, 'வானகம்' பயிற்சிப் பட்டறைப் பண்ணையில், சுமார் 6,000 இளைஞர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சியைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த பசுமைப் போராளி.* பூச்சி கொல்லிகள்* மீத்தேன் வாயு திட்டம்* மரபணு சோதனைகள்* பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி* வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி* விவசாய நிலங்களை அழித்தல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்களை, முன்னெடுத்து நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !