உள்ளூர் செய்திகள்

சுகாதார அட்டை!

ஜம்மு - காஷ்மீரில் அரசுப் பள்ளிகளில் பயிலும், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்காக மாணவர் சுகாதார அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு, 'இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் தடுப்பூசி விவரங்கள் அந்த அட்டையில் பதியப்படும். மாணவர்களின் உடல்நலன் கண்காணிக்கப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !