உள்ளூர் செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா விருப்பம்!

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்.ஐ.ஹெச்.) சார்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த தொடரில் பெல்ஜியம் சாம்பியன் ஆனது. அடுத்த உலகக் கோப்பைத் தொடர் 2022இல் நடக்க உள்ளது. இப்போட்டியை நடத்த பெல்ஜியம், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே, மூன்று முறை (1982, 2010, 2018) போட்டியை நடத்தியுள்ள நிலையில், மீண்டும் இந்தியா இத்தொடரை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. அதே சமயம், 2023இல் ஜனவரி 13 முதல் 29 வரை நடத்த விரும்புகிறது. பெண்கள் தொடரைப் பொறுத்தவரை, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, மலேசியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் போட்டியை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதுபற்றி இந்த ஆண்டு நவம்பர் 8இல் நடக்கும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !