வீடு தேடி காப்பீடு!
வாகனக் காப்பீடு எடுக்க நடமாடும் வண்டிகள் அறிமுகமாகியுள்ளன. இதில் சில நிமிடங்களிலேயே வாகனக் காப்பீடுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்துடன் இணைந்து இருசக்கர வாகன பழுதுபார்க்கும் உரிமை யாளர்கள் சங்கம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. இவ்வண்டியில் பெண்களுக்கான மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான வழிகளும் எடுத்துச் சொல்லப்படும் என தெரிவித்துள்ளனர். விவரம் அறிய: 7305350578 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.