சைகாவுக்கு தடுப்பூசி; இந்திய விஞ்ஞானிகள் சாதனை
பிப். 4 - தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும், 'சைகா' வைரஸுக்கு எதிரான, முதல் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள், இரண்டு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர். இந்தத் தகவலை, அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா இலா தெரிவித்தார்.