ஃபேஸ்புக்கில் தகவல் திருட்டு
ஃபேஸ்புக் பயனர்களில், 9 கோடிப் பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். அவற்றில் 2.9 கோடி பயனர்களின் தரவுகள் திருடப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றுடன், அவர்கள் வசிக்கும் ஊர், இடம், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, 1.5 கோடி பயனர்களின் கணக்குகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இதன் இதர துணைச் செயலிகளான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்றவை பாதுகாப்பாக இருப்பதாகவும், தகவல் திருட்டில் ஈடுபடும் ஹேக்கர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து தெரியவில்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.