மிரட்டும் வெப்பம்!
தமிழகத்தில் மட்டும்தான் கடுமையான வெயில் அடிக்கிறது என பலரும் நினைக்கிறோம். தமிழகத்தைவிட மோசமான நிலையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், சண்டிகர், பீகார், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் உள்ளன. மேலும், இங்கெல்லாம் அதிகப்படியான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அனல் நகரங்கள்!இராஜஸ்தான் மாநிலத்தின் 'சுரு' என்ற நகரத்தில், இந்தியாவிலேயே மிக அதிகமாக, 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கடுத்து, மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூர், தடோபா புலிகள் சரணாலயத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும் இங்கு அனல் காற்றும் வீசி வருகிறது. பகுதி - வெப்பம் (டிகிரி செல்சியஸ் அளவில்)சமவெளி - 40 அல்லது அதற்கும் மேல்கடற்கரை - 37 அல்லது அதற்கும் மேல்மலை - 30 வெப்பமானியில் அளக்கும்போது, வெப்பக் காற்றின் அளவு மட்டுமே கிடைக்கும். ஆனால், நமக்கு காற்றின் ஈரப்பதம், காற்றின் அளவு, சூரியக் கதிர்வீச்சு, சூரிய ஒளியின் வெப்ப அழுத்தம், சூரியக் கோணம் என அனைத்தும் தேவைப்படுகிறது. இதனை அளவிட உலக அளவில் வெட்பல்ப் குளோப் டெம்ப்ரேச்சர் (Wet-Bulb globe temperature) என்ற கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.காற்றின் வெப்பநிலையும், காற்றின் ஈரப்பதம் ஆகிய இரண்டையும் சேர்த்தால், நமக்கு வெப்ப அட்டவணை கிடைக்கும். இதை வைத்துத்தான் ஆய்வாளர்களும் நம்மை எச்சரிக்கின்றனர். கடற்கரை நகரமான சென்னையில், நடந்துசெல்லும்போது வெயிலை நன்றாக உணரலாம். கீழ்வரும் அட்டவணையைப் பார்த்தால், ஈரப்பதம் எந்த அளவிற்கு வெப்பநிலை தாக்கத்திற்கு துணை நிற்கிறது என அறியலாம். இடம் - வெப்பநிலை (டிகிரி) - உணரும் அளவு (டிகிரி) - ஈரப்பதம்டில்லி - 42 - 42 - 17%சென்னை - 36 - 40 - 57%நாக்பூர் - 44 - 44 - 15%தெலங்கானா - 41 - 44 - 27%மராத்வாடா - 32 - 39 - 66%