உள்ளூர் செய்திகள்

பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் தமிழக அளவில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' (Bio Metric) வருகைப் பதிவேடு ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தலைமை ஆசிரியர், ஆசிரியர், அலுவலர்களோடு இனி மாணவர்களின் வருகைப் பதிவு நேரத்தையும் கண்காணிக்க முடியும். தொடர்ந்து விடுப்பெடுத்த, பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து நல்வழிப்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !