ரீலா ரியலா?
நமது சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய துணைக்கோள் 'டைட்டன்.'தவறு. சனியின் துணைக்கோளான 'டைட்டன்' சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள் ஆகும். இதைவிடப் பெரியது வியாழனின் துணைக்கோளான 'கனிமீட்' (Ganymede), 2,631 கி.மீ. ஆரம் உடையது. இது ப்ளூட்டோ, புதன் கிரகங்களைவிடப் பெரியது. நமது சூரிய குடும்பத்தில் காந்த மண்டலத்தைக் கொண்ட ஒரே துணைக்கோள் இதுதான். இது வியாழனிலிருந்து 6,65,000 கி.மீ. தூரத்தில் உள்ளது. உலகின் மிக நீளமான பாம்பு ரெடிகுலேடட் பைதான் (Reticulated python).உண்மை. சராசரியாக 25 அடி வரை இது வளரும். 158 கிலோ எடை வரை இருக்கும். 1912ஆம் ஆண்டு பிடிபட்ட இந்த இனத்தைச் சேர்ந்த பாம்பு ஒன்று, 32.8 அடி நீளம் இருந்தது. இது ஒட்டகச்சிவிங்கியின் உயரத்தைவிட அதிகமானது. இப்பாம்புகள் தென் கிழக்காசியாவின் மழைக்காடுகளிலும், புல்வெளிகளிலும் வாழ்கின்றன.