உள்ளூர் செய்திகள்

தெரிந்த காந்தி தெரியாத தகவல்கள்

அகிம்சை, சத்தியாக்கிரகம், தனிநபர் ஒழுக்கம் ஆகிய கொள்கைகளின் முழு வடிவமாக மாறிய காந்தியைப் பற்றி அறிந்திராத சில தகவல்களை இங்கே பார்ப்போம்!5 முறை: அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.புகைப்படம் எடுப்பதைக் கடுமையாக வெறுத்தார். ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மனிதர் அவர்தான்.13: காந்திக்குத் திருமணம் நடந்தபோது வயது இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தைத் திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார். 53: இந்தியாவில் 53 முக்கிய சாலைகளுக்கும், வெளிநாடுகளிலுள்ள 48 சாலைகளுக்கும் காந்தியின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.18கி.மீ.: விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி தினசரி நடந்த தூரம். இப்படி நாற்பது ஆண்டுகள் நடந்தார். 1913 - 1948 காலகட்டத்தில் 79 ஆயிரம் கி.மீ. தூரத்தை நடந்தே கடந்திருந்தார்.700 நாற்பது ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தில் தினசரி காந்தி எழுதி வந்த வார்த்தைகள். 1930 டைம் பத்திரிகையால் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்.1961 காந்திக்கான முதல் தபால்தலையை அமெரிக்கா 1961, ஜனவரி 26 அன்று வெளியிட்டது. முதல் அஞ்சல் அட்டையை போலந்து வெளியிட்டது.முதன்முதலில் 'தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்'மகாத்மா' என்று அழைத்தவர் இரவீந்திரநாத் தாகூர்தகவல்: www.biography.com, gandhiworld.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !