உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் குமரி

இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியின் பல்வேறு சிறப்பம்சங்களில் முக்கியமானவை கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, மற்றொன்று 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகும். எனவே, இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தால் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முந்தைய 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 82ஆயிரம் பேர் அதிகமாக வந்துள்ளனர் என்றும், நடப்பு ஆண்டில் இந்தச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும் என்றும் இந்நிறுவன அதிகாரிகள் மகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !