உள்ளூர் செய்திகள்

இசையால் இணைவோம்: இசையின் முதல் படி: சி மேஜர்

மேற்கத்திய இசைத் துறையில் 'சி மேஜர்' (C Major) என்பது இசையின் ஆணிவேர். இது 'டோனிக்' (Tonic) அல்லது 'இயற்கை ஸ்கேல்' (Natural Scale) என்று அழைக்கப்படுகிறது. இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு, மூன்று வயதுக் குழந்தையாக இருந்தாலும், முதலில் கற்றுத்தரப்படுவது இதுவே. இதற்குக் காரணம், இதன் எளிமையான கட்டமைப்புதான்.சி மேஜரின் மிகச்சிறப்பு, இதில் 'ஷார்ப்' (# - Sharp) மற்றும் 'பிளாட்' (b - Flat) எனப்படும் இசைக் குறியீட்டு மற்றும் ஸ்வரஸ்தாயி மாறுபாடுகள் இல்லை. பியானோ போன்ற இசைக்கருவிகளில் உள்ள வெள்ளைக் கட்டைகளை மட்டும் வரிசையாக வாசித்தாலே இந்த ஸ்கேல் கிடைத்துவிடும். ஷார்ப், பிளாட்களைக் குறிக்கும் கறுப்புக்கட்டைகளின் பயன்பாடு இந்த ஸ்கேலில் கிடையாது.எனினும், பியானோவில் அதிவேகமாக வாசிப்பதற்கு இது சற்றே கடினமானதாகக் கருதப்படுகிறது. ஏன் தெரியுமா? பியானோவில் மொத்தம் 88 கறுப்பு வெள்ளைக் கட்டைகளும் எட்டு ஆக்டேவ்களும் (C,D,E,F,G,A,B,C) உண்டு.சி மேஜரில் பிற ஸ்கேல்கள் போலக் கறுப்புக்கட்டைப் பயன்பாடே இல்லாததாலும், வெள்ளைக் கட்டைகள் ஒன்றுபோலவே காட்சியளிப்பதனாலும் பியானோ கலைஞரால் அடுத்தடுத்த ஆக்டேவ்களின் ஆரம்பத்தைக் கண்களால் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது. எனவே இதனை இசைக்க, ஒலி ஞானம் தேவை.ஆனால், வயலின், கிதார், செலோ, மேண்டலின் போன்ற தந்திக் கருவிகளில் இதை வாசிப்பது எளிது. ஏனென்றால், மனித விரல் அமைப்புக்கு ஏற்ப இந்த ஸ்கேல் இயல்பாக அமைந்துள்ளது. எனவே இந்தத் தந்திக் கருவிகளின் பிங்கர்போர்டில் இந்த ஸ்கேல் ஸ்வரங்களைச் சரியாகப் பிடிப்பது, மேலும் கீழும் கிளைட் செய்வது எளிது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !