பாரு பாரு.... பழசு பாரு...
பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த பொருட்கள், வாகனங்கள், இடங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதை அறிமுகம் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம். இதற்கு முன்னால் மாட்டு வண்டியை அறிமுகப்படுத்தி இருந்தோம். இப்போது 'வள்ளம்' பற்றிப் பார்க்கலாம்.வள்ளம் என்பது நீரில் பயணிக்கவும் மீன்பிடிக்கவும் பயன்படும் ஒரு நீர் ஊர்தி. இது பாய்மரப் படகைவிடச் சிறியது. உலகில் பல நாடுகளிலும் நம் ஊர்ப் பகுதிகளிலும் பண்டைக் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.கூத்துவாரி [உள்ளே நெடுக்குவாக்காக இருக்கும் தடித்த பலகை]பூவெச்சம் [பாய்மரக் கம்பைத் தாங்க கூத்துவாரியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி]ஒட்டம் [இரண்டு ஓரத்தையும் குறுக்குவாக்காக இணைக்கும் பலகை]அணியம் [வள்ளத்தின் முன்பகுதி]வங்கு [U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கத் தடிமனான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை]கட்டு வள்ளம்: தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் காணப்படும் ஒருவகையான படகு வீடு. இதற்கு கயிறுகளால் கட்டப்பட்ட படகு என்பது பொருள்.