உள்ளூர் செய்திகள்

ஏக்கம் போனது; சந்தோஷம் வந்தது!!

பள்ளிகள் மீண்டும் திறந்தாச்சு. கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு, 'திரும்பவும் பள்ளிக்கு வந்த முதல் நாள் எப்படி இருந்தது?' உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சென்னை, மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் படிக்கும் மாணவர்களைக் கேட்டோம்:அஸ்வின் (9ஆம் வகுப்பு): ஸ்கூல் வந்ததுமே பதற்றம் வந்துடுச்சு. இப்ப 9ஆம் வகுப்பு வந்துட்டேன். பாடத்திட்டமும் மாறிடுச்சு. போன வருஷம் பருவத் தேர்வுகளாக இருந்துச்சு. தனித்தனி புத்தகம் இருந்துச்சு. இப்ப ஒரே புத்தகம். மொத்தமாகப் படிக்கணும். நினைக்கிறப்பவே பயமாகத்தான் இருக்கு. விடுமுறை சந்தோஷமெல்லாம் மனசுலதான் இருக்கு. கிஷோரன் (8ஆம் வகுப்பு): ஸ்கூல்ல இருக்கும்போது, எப்படா லீவு விடுவாங்கன்னு இருந்துச்சு. இந்த முறை 50 நாள் லீவு கொடுத்தாங்க. ஊர்ல நல்லா விளையாடினேன். திரும்பவும் ஸ்கூல் போகணும்னு சொன்னதும் கஷ்டமாக இருந்துச்சு. இதோ ஸ்கூலும் தொடங்கிடுச்சு. ஆனா இன்னும் புக்ஸ் எதுவும் வரலை. அதுவும் புது புக்ஸ் கொடுப்பாங்களாம். அதுல என்னென்ன பாடங்கள் இருக்குமோன்னு டென்ஷனாகவே இருக்கு.செந்தமிழ்வளவன் (10ஆம் வகுப்பு): இந்த ஆண்டு 10வது. எல்லோரும் அதைச் சொல்லிச் சொல்லி பயத்தை ஏற்படுத்திட்டாங்க. அதனால ஸ்கூல் வந்ததுமே பயம் வந்துடுச்சு. பாடநூலைப் பார்த்தால் பயம் போகலாம். ஆனால், இன்னும் அது கிடைக்கவில்லை. அதனால பயந்துக்கிட்டே தான் இருக்கேன்.வசந்த் (8ஆம் வகுப்பு): விடுமுறையில் ஊருல இருந்தபோது ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு. அப்பா, அம்மா, அக்கா, பாப்பா எல்லோரும் வெளியில போனோம். அப்பா வேலை செய்யற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போனார். நல்லா சுத்தினேன். இங்கே திரும்ப வந்ததும், வீட்டில் எல்லோரையும் மிஸ் பண்றோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.வெங்கடேஷ் (10ஆம் வகுப்பு): லீவுல அப்பாகூட வேலைக்குப் போனேன். சினிமா எல்லாம் பார்த்தேன். லீவு முடிஞ்சு திரும்பவும் பள்ளிக்கூடம் போகணுமாப்பான்னு கேட்டேன். அப்பாதான் சொன்னார், படிப்புல இது முக்கியமான ஆண்டு. நல்ல மார்க் எல்லாம் வாங்கணும்னு சொன்னார். அதை மனசுல வச்சுட்டு, திரும்பவும் ஸ்கூல் வந்துட்டேன். இங்கே நண்பர்களைப் பார்த்ததும் சந்தோஷமாகிடுச்சு.ஹரிஹரன் (7ஆம் வகுப்பு): லீவுல ஊருல அம்மாவைப் பார்த்ததுமே சந்தோஷமாக இருந்துச்சு. லீவு முழுக்க ஜாலியா விளையாண்டேன். டிவி பார்த்தேன். தாத்தா, மாமா எல்ேலார் வீட்டுக்கும் போனேன். ஊரைவிட்டு ஸ்கூலுக்கு போகணுமேன்னு ஏக்கமாக இருந்துச்சு. முதல் நாள் ஸ்கூலுக்கு வந்து பசங்களைப் பார்த்ததும் அந்த ஏக்கம் குறைஞ்சுடுச்சு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !