உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: நீண்ட... ரிப்பன்!

கார்த்திகாவிடம் 58 செ.மீ. நீள ரிப்பன் இருந்தது.ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு செ.மீ. அளவில், அதைக் கத்திரிக்கோலால் வெட்டுகிறாள்.58 துண்டுகள் பெற, அவளுக்கு எத்தனை வினாடிகள் தேவைப்படும்?(குறிப்பு: கார்த்திகா எந்தத் துண்டையும் மடித்து வெட்டவில்லை.)விடை: 57 வினாடிகள்58 துண்டுகளைப் பெற, கார்த்திகா 57 வெட்டுகளை மட்டும் வெட்டினால் போதும்.ஒரு வினாடிக்கு ஒரு செ.மீ. வெட்டு என்ற அடிப்படையில், முதல் 56 வினாடிகளில் 56 துண்டுகளை கார்த்திகா பெறுவாள். பிறகு, 2 செ.மீ நீளமுள்ள துண்டு மீதம் இருக்கும்.ஒரு வினாடிக்கு ஒரு வெட்டு என்ற அடிப்படையில், ஒரு துண்டை இரண்டாக வெட்டலாம் அல்லவா!எனவே, கார்த்திகாவுக்கு 58 துண்டுகளைப் பெற, 57 வினாடிகள் தேவைப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !