நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடைகளைப்பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. இந்திய மாநிலம் ஒன்றின், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர், ஆளும் அமைச்சரவையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முதன்முறையாக, 50 பேர் அடங்கிய நிழல் அமைச்சரவையை அமைத்துள்ளார். அவர் யார்? எந்த மாநிலம்?அ. பழனிசாமி, தமிழகம்ஆ. நவீன் பட்நாயக், ஒடிசா இ. ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரப்பிரதேசம்ஈ. சந்திரசேகர ராவ், தெலங்கானா02. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எந்தத் துறைக்கு அதிக நிதி (ரூ. 4,54,773 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது?அ. ராணுவம், ஆ. விவசாயம்இ. உள்துறை,ஈ. சுகாதாரம்03. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்தவர்?அ. யுவராஜா,ஆ. கார்த்திக்இ. வாசன்,ஈ. துரைராஜ்04. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததன் மூலம், தொடர்ந்து எத்தனையாவது முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்?அ. எட்டு,ஆ. ஐந்துஇ. ஏழாவது,ஈ. மூன்று05. தமிழகத்தில், 2,500 சதுரடி வரையுள்ள மனையில், 3,500 சதுரடிக்குள் குடியிருப்புக் கட்டடம் கட்ட, எதன் வாயிலாக உடனடியாக அனுமதி பெறும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்கி உள்ளது?அ. தொலைபேசி,ஆ. கடிதம்இ. இணையம்,ஈ. நேரடியாக06. தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக, புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளவர்?அ. எஸ்.சதீஷ்,ஆ. பி.என்.ஸ்ரீதர்இ. கவிதா,ஈ. கே.சுமலதா07. மேட்டூர் அணையில், தண்ணீர் எத்தனை டி.எம்.சி. நிரம்பிய பிறகே, பாசனத்திற்குத் திறந்துவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு, நீர்வளத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்?அ. 50,ஆ. 40,இ. 60,ஈ. 3008. மத்திய பட்ஜெட்டில், விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு, ரூ.3442.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, எவ்வளவு கோடி ரூபாய் அதிகம்?அ. ரூ.45.36,ஆ. ரூ.50.45இ. ரூ.30.60,ஈ. ரூ.80.40விடைகள்: 1. ஆ, 2. அ, 3. அ, 4. இ, 5. இ, 6. ஆ, 7. இ, 8. அ.