அகழாய்வுக்கு அனுமதி!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் பல பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து கீழடியுடன் கூடவே ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் ஆய்வுகளைத்தொடங்க, மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது.