உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

கலஹாரி பாலைவனம் ஐரோப்பாவில் உள்ளது. தவறு. கலஹாரி பாலைவனம், தென்னாப்பிரிக்காவின் உட்புறப் பகுதியில் உள்ளது. இது கிட்டத்தட்ட முழு போட்ஸ்வானா நாட்டையும், நமீபியாவின் கிழக்குப் பகுதியையும், தென்னாப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தின் வட பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. தென்மேற்கில், இது நமீபியாவின் கடற்கரைப் பாலைவனமான நமிப் உடன் இணைகிறது. இப்பாலைவனம், வடக்கு- -தெற்காக 1,600 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது, கிழக்கு- -மேற்காக, இதன் நீளம் 966 கி.மீ. மொத்தப் பரப்பளவு 9,30,000 சதுர கிலோமீட்டர். இது கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு உருவாகும் மணற்குன்றுகள், குறைந்தது 1.6 கி.மீ. நீளம், 20 முதல் 200 அடி உயரம் வரை இருக்கும்.வைட்டமின் ஏ குறைபாடு கண், தோல் வறட்சியை உருவாக்கும்.உண்மை. தோலில் உள்ள செல்களின் உற்பத்திக்கும், ஆரோகியத்திற்கும் வைட்டமின் ஏ இன்றியமையாதது. வைட்டமின் ஏ சத்து உடலில் குறைந்தால்,தோல் வறட்சி, அரிப்பு, வீக்கம் ஏற்படும். போதுமான வைட்டமின் ஏ சத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், கண் கருவிழிப் படலம் பாதிக்கப்படும்; கண்ணீர் உற்பத்தி தடைப்பட்டு, கண்கள் வறண்டு போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !