உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் வசதி, இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது?அ. திரிபுராஆ. மிசோரம்இ. கர்நாடகம்ஈ. நாகாலாந்து2. உலகிலேயே மிக உயரமான போர்க்களமான எந்தப் பகுதிக்கு, கேப்டன் ஷிவா சௌஹான் என்ற இந்திய இராணுவத்தின் பெண் அதிகாரி ஒருவர், முதன்முறையாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்?அ. இமயமலைச் சிகரம்ஆ. சியாச்சின் பனிமலைச் சிகரம்இ. கிளிமாஞ்சாரோ சிகரம்ஈ. மெளன்ட் எல்பிரஸ்3. பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், எந்தத் தயாரிப்புக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?அ. ஆதார் அட்டைஆ. பான் கார்டுஇ. டேப்லெட்ஈ. மொபைல்போன்4. ஆசியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் என்ற பெருமை கொண்ட, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா யாதவ், சமீபத்தில் எந்த இரயிலை முதன்முறையாக இயக்கிய பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்?அ. வந்தே பாரத்ஆ. இராஜ்தானி எக்ஸ்பிரஸ்இ. துரந்தோ எக்ஸ்பிரஸ்ஈ. ஜன் சதாப்தி 5. உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வுசெய்யும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர். என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், எத்தனை இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன?அ. 40ஆ. 10இ. 39ஈ. 256. கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த எந்த நாட்டின் எல்லைப் பகுதிகள், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன?அ. சீனாஆ. ஜப்பான்இ. அமெரிக்காஈ. ரஷ்யா7. 'கே.கே.பிர்லா அறக்கட்டளை' எனும் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான, 'சரஸ்வதி சம்மான்' விருது, சென்னையைச் சேர்ந்த எந்த எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?அ. இந்துமதிஆ. வாஸந்திஇ. அனுராதா ரமணன்ஈ. சிவசங்கரிவிடை: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. இ, 6. அ, 7. ஈ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !