அட்டவணை வெளியீடு
நடப்பாண்டு முதல் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும்; 5ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக நடைபெற உள்ள 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் காலை 10 மணிக்குத் தொடங்கி, 12.15 மணிக்கு முடிவடையும்.