ஸ்மார்ட் கல்வி!
உத்தரப் பிரதேசம், சித்தாய்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் முதல்வர், மாணவர்களுக்கு 10 டேப்லெட்டுகளை, தன் சொந்தப்பணத்தில் வாங்கிக் கொடுத்துள்ளார். “இன்றைய நவீன உலகில் வேகமாகக் கற்றுக்கொள்ள இந்த டேப்லெட்கள் பயன்படும். இதன் மூலம் மாணவர்கள் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து, பல்வேறு அறிவியல் விஷயங்களை நேரடியாகவே கற்றுக்கொள்ள முடியும்” என்றார் பள்ளி முதல்வரான அரவிந்த் பால். பள்ளி முதல்வரின் இப்பணியை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.