உள்ளூர் செய்திகள்

பாம்புகளும் கட்டுக்கதைகளும்

கதை : பாம்பு பால் குடிக்கும்!உண்மை: பாம்புகள் ஊர்வன வகை, அவற்றால் பாலை செரிமானம் செய்ய முடியாது. பொதுவாக நாகம் / நல்ல பாம்பிற்கு பால் ஊற்றுவார்கள். ஆனால், உண்மையில் எலி மற்றும் தவளைகளையே அவை விரும்பி உண்கின்றன.கதை: பாம்புகள் பழிவாங்கும்!உண்மை: பாம்புகளின் மூளை, மற்ற உயிரினங்களைப் போல அதிகம் நினைவில் வைத்துக் கொள்ளாது. அது, மிகவும் சிறிய அளவிலானது. நினைவுத்திறன் குறைந்த பாம்பு, மனிதர்களைப் பழிவாங்கும் என்ற எண்ணம் வெறும் கட்டுக்கதையே.கதை : பாம்புகள் (நல்ல பாம்பு) நாகமாணிக்கத்தைக் கொண்டவை.உண்மை: நாகமாணிக்கம் என்பது ஒரு மூடநம்பிக்கையே. நிஜத்தில் நாகமாணிக்கம் இருப்பின், பாம்புகளைப் பற்றி நன்கு அறிந்த பழங்குடியினரான இருளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்குமே?கதை: பாம்புகள் மகுடிக்கு மயங்கி நடனமாடும்!உண்மை: மற்ற உயிரினங்கள் போல பாம்புகளுக்கும் செவித்திறன் கிடையாது. புறச்செவி வளர்ச்சி இல்லாத பாம்பானது, தனது கீழ்த்தாடையால் உணரப்படும் அதிர்வுகளைக் கொண்டே உணர்கின்றன. மகுடியை நாகத்தின் முன் அசைத்து இசைக்கும்பொழுது, அவை மகுடியின் அசைவை நோக்கியே நகரும். இதை நாம் நடனம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம்.கதை: கட்டுவரையன் ஒரு சுவாச வாயு திண்ணி பாம்பு.உண்மை: இரவில் மட்டுமே நடமாடும் வகையைச் சேர்ந்தது கட்டுவரையன். இரவு நேரத்தில் உணவு தேடும்போது, தரையில் உறங்கும் பழக்கம் கொண்ட மனிதர்களை சில நேரங்களில் கடிப்பதுண்டு. கட்டுவரையனின் விஷம், மனிதர்களின் நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நரம்பு மண்டலம் தாக்கப்படும். பாம்பின் விஷத் தாக்கத்தால், கடிபட்ட மனிதர் இறக்க நேரிடும்.கதை : நாகம் பெண் இனம்; சாரை ஆண் இனம் -இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணையும்.உண்மை: நாகம் தனி, சாரை தனி. இவை இரண்டு வகையிலும் ஆண்/பெண் பாலினங்கள் உண்டு. அதுமட்டுமல்லாது அவை தன் இனத்தோடுதான் இணைந்து இனப்பெருக்கம் செய்யும்.- ந.ச.மனோஜ் www.user.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !