மாரடைப்பை கண்டறியும் கருவி தமிழக மாணவர் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ் (15). இவர், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்து, சாதனை புரிந்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆகாஷுக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருது வழங்கி கவுரவித்துள்ளார். இதுதொடர்பாக, ஆகாஷ் கூறும்போது,'மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை, இந்தக் கருவி 6 மணி நேரத்துக்கு முன்பே கண்டுபிடித்து, எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைத்துள்ளேன். ஜப்பானின் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனை இந்தக் கருவிக்கு, அங்கீகாரம் அளித்துள்ளன. அரசே இக்கருவியை தயாரிக்க முன்வரும்போது, வெறும் 900 ரூபாய்க்கு அனைவருக்கும் கிடைக்கும்.' என்றார்.