மெஸ்சிக்கு சோதனை
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி. ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். கடந்த 2007 முதல் 2009 வரை விளம்பர வருமானத்தில் ரூபாய் 30 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக, பார்சிலோனா நீதிமன்றத்தில் மெஸ்சி மீது வழக்கு தொடரப்பட்டது. முடிவில், மெஸ்சி மற்றும் இவரின் கணக்கை கவனித்து வந்த தந்தை ஜார்ஜ் ஹொராசியோவுக்கு தலா 21 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏற்ெகனவே, கோபா அமெரிக்கா ஃபைனலில் தோல்வி, சர்வதேச அரங்கில் ஓய்வு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிய மெஸ்சிக்கு இது மீண்டும் சோதனையைத் தந்துள்ளது.