உள்ளூர் செய்திகள்

ராமருக்குக் கோயில் கட்டிய ஆங்கிலேய அதிகாரி

இவர் 1795-இல் செங்கல்பட்டு பகுதிக்கு அதிகாரியாக இருந்தபோது, ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்களைத் தூர்வாரி, மதகுகளைச் சரிசெய்து விவசாயத்துக்கு வழி வகுத்தார். வேடந்தாங்கல் ஏரியில் பறவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அங்கு யாரும் துப்பாக்கியால் சுடக்கூடாது, பறவைகளைத் துன்புறுத்தக்கூடாது என்று ஆணையிட்டார்.மதுராந்தகம் ஏரி, ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் நிரம்பி உடைவதும், ஊருக்குள் தண்ணீர் புகுவதுமாக இருந்தது. இதனால் மக்கள் இன்னல்களுக்கு ஆளானார்கள். 1798-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடும் மழை பெய்தது. அந்த முறையும் ஏரி உடைந்துவிடுமோ என்ற பயத்தில், ஏரிக்கரையிலேயே முகாமிட்டிருந்தார்.அப்போதுதான், 'இந்த ஊர் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி, ஏரி உடையாமல் இருந்தால், கோயில் கட்டுகிறேன்' என்று வேண்டிக்கொண்டார். மறுநாள் மதுராந்தகம் ஏரி உடையாமல் இருந்ததைக் கண்ட ஆங்கிலேய அதிகாரி, அங்குள்ள தாயாருக்கு ஒரு சன்னதி கட்டிக்கொடுத்தார்.சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில், இவருடைய பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் உள்ளது. அதற்கு முன்பு வரை, அந்தக் கோயில் அயோத்தி பெருமான் கோயில் என்று அழைக்கப்பட்டது.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இது ஏரிக்காத்த ராமர் கோயில் என்று அழைக்கப்பட்டது. இந்த அதிகாரி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் தங்கத்தினாலான, விலையுயர்ந்த கற்கள் பதித்த தலைக்கவசம் (கிரீடம்) ஒன்றை வழங்கினார் என்று (Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture) என்ற நூல் குறிப்பிடுகிறது.யார் இந்த ஆங்கிலேய அதிகாரி?விடை: லயனல் பிளேஸ் (Lionel Place). அதிகாரி பெயரை குறிப்பிடும் கோயில் கல்வெட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !