பொறுப்பற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
அரசுப் பணியாளர்கள், அவர்களது அசையா சொத்துகள் பற்றிய முழுமையான தகவல்களை, ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். நடப்பாண்டில், நாடு முழுவதும் 338 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களின் அசையா சொத்துகள் பற்றிய தகவல்களைத் தாக்கல் செய்யவில்லை என நாடாளுமன்றக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு பரிந்துரையையும் அக்குழு செய்துள்ளது.